சென்னை: திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள பாலகத்தின் முன்பு நேற்று (ஏப்ரல் 10) அதிகாலை பால் பாக்கெட்டுகள் இறக்கி வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து கடையின் உரிமையாளர் செந்தில் பாலகத்தை திறக்க வந்துள்ளார். அப்போது பால் பாக்கெட்டுகள் குறைந்து உள்ளதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த செந்தில் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அதில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த நபர் பால் பாக்கெட்களை திருடிச் செல்வது பதிவாகியிருந்தது.