சென்னை:அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வடமாநில நபர்கள் பெட்ரோல் தீர்ந்து போனதால் இருசக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டே பெட்ரோல் பங்குக்கு வந்து பெட்ரோல் நிரப்புகின்றனர். பின்னர் வாகனத்தில் அமர்ந்து இருசக்கர வாகனத்தை இயக்க அது எதிர்பாராத விதமாக எதிரே இருந்த சாலையில் சென்று தடுப்பில் மோதி விழுந்தது. அப்பொழுது அவ்வழியே வந்த லாரி ஒன்று அந்த இருசக்கர வாகனம் மற்றும் அதை இயக்கிய நபருடன் வாகனத்தின் மீது ஏறியது.
இந்த கோர விபத்தில் வாகனம் நொறுங்கி அதிலிருந்தவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். இவை அனைத்தும் எதிரே இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையின் விசாரணையில் இறந்தவர் லொலன் ராணா(22) என்பதும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவர் அத்திபட்டி உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவரது குடும்பத்தாரை தொடர்பு கொண்டு அவரது உடலை ஒப்படைக்கும் முயற்சியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
தடுமாறி வந்த பைக்கின் மீது தாறுமாறாக ஏறிய லாரி இது போன்ற விபத்துகளைத் தவிர்க்க: இருசக்கர வாகனத்தில் செல்லுவோர் இது விபத்துகளில் சிக்கிக்கொண்டு தங்களின் இன்னுயிரை இழக்காமல் இருக்க மிதமான வேகத்தில் சாலை விதிமுறைகளைப்பின்பற்றி பயணம் செய்தால் விபத்துகளையும் அதனூடாக வரும் பாதிப்புகளையும் தவிர்க்கலாம் என்பதை மறவாதீர்கள்.
இதையும் படிங்க: Video - 'படையப்பாவாக' மாறிய சுகாதார ஆய்வாளர்!