சென்னை: CCTV cameras will be set: திருவான்மியூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் ஆய்வு மேற்கொண்டார். பெண்கள் தங்குவதற்கு ஓய்வு அறையைத் திறந்து வைத்த பின்னர், ரயில் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் சுரங்கப் பாதையைப் பார்வையிட்டார். சுரங்கப் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கொள்ளையில் ஈடுபட்ட பெண் ஊழியர் பணி இடைநீக்கம்
திருவான்மியூர் ரயில் நிலையத்தில் கொள்ளை நடந்தது போல் நாடகமாடி ரூ.1.32 லட்சம் திருடிய வழக்கில், ரயில்வே ஊழியர் டீகா ராம் மற்றும் அவரது மனைவி சரஸ்வதியை ரயில்வே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட பெண் ஊழியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும்
அதன் பின் செய்தியாளர்களைச் சந்திப்பின் போது, திருவான்மியூர் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் கொள்ளைச் சம்பவம் அரங்கேறி இருக்கிறா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் "அப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது சாத்தியமில்லை. முக்கிய ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறோம்’ என்று கூறினார்.
ரயில் பயணிகளின் கோரிக்கைகளை கடம்பத்தூர், திருநின்றவூர், திருவள்ளூர் ஆகிய ரயில் பயணிகளின் சங்கத் தலைவர்கள் அவர்களிடம் மனுவாக கொடுத்தனர்.
தென்னக ரயில்வே பொது மேலாளர் பேட்டி இதையும் படிங்க: திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளை: கணவன், மனைவி சதி - பின்னணி என்ன ?