தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஜிப்மர் மருத்துவமனையில் சிபிஐ விசாரணை - சிபிஐ அதிகாரிகள் திடீர் விசாரணை

புதுச்சேரி : ஜிப்மர் மருத்துவமனை உயர் அலுவலர்களிடம் சிபிஐ திடீரென விசாரணை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜிப்மர் மருத்துவமனையில்  சிபிஐ அதிகாரிகள் திடீர் விசாரணை
ஜிப்மர் மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் திடீர் விசாரணை

By

Published : Mar 4, 2021, 11:32 AM IST

புதுச்சேரி கோரிமேட்டில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மருத்துவம் பயின்று வருகின்றனர். புதுவை மட்டுமல்லாது அனைத்து மாநிலங்களிலிருந்தும் சிறந்த சிகிச்சைக்காக மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். ஜிப்மர் மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் தனியார் நிறுவன காவலாளிகள் பலர் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காவலர் பணிகளை ஒப்பந்தத்திற்கு எடுத்த தனியார் நிறுவனம் பணியாளர்களுக்கு சரியாக ஊதியம் வழங்கவில்லை. இதனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் ஒப்பந்தம், பணி நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக சிபிஐக்கு புகார் அனுப்பியுள்ளனர்.

புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. தற்போது திடீரென சென்னையிலிருந்து புதுச்சேரி வந்த நான்கு பேர் கொண்ட சிபிஐ அலுவலர்கள் குழு மருத்துவக் கல்லூரி உயர் அலுவலர்களிடம் முறைகேடு குறித்த விசாரணையை தொடங்கியது. திடீர் விசாரணையால் மருத்துவமனை ஊழியர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க :'22 ஆண்டுகளாக மகனை இடுப்பிலிருந்து இறக்கி வைக்காத தாய்' -மதுரை ஆட்சியரின் மகத்தான சேவை

ABOUT THE AUTHOR

...view details