தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நில அபகரிப்பு வழக்கு: திமுக எம்.பி.க்கு சிபிசிஐடி அழைப்பாணை! - நில அபகரிப்பு வழக்கு

சென்னை: நில அபகரிப்பு வழக்கில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆவணங்களைச் சமர்ப்பிக்க சிபிசிஐடி அழைப்பாணை அனுப்பியுள்ளது.

mp
mp

By

Published : Oct 28, 2020, 3:42 PM IST

Updated : Oct 28, 2020, 4:11 PM IST

குரோம்பேட்டை பகுதியில் அரக்கோணம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இது தொடர்பான நில அபகரிப்பு வழக்கை சிபிசிஐடி விசாரித்துவருகிறது.

அதன்படி, பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று காலை பல்லாவரம் கோட்டாட்சியர், வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரிடம் சிபிசிஐடி துணைக் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையிலான 15 பேர் கொண்ட காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

அதனைத்தொடர்ந்து, நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. இதையடுத்து பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஜெகத்ரட்சகன் இன்று வருவதாக தகவல் வந்ததால், காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். மேலும், அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாததால் பரபரப்பாகவே காணப்பட்டது.

நில அபகரிப்பு வழக்கு: திமுக எம்.பி.க்கு சிபிசிஐடி அழைப்பாணை!

பின்னர், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இன்று வர முடியவில்லை என்றும், எனவே ஆவணங்களைச் சமர்ப்பிக்க மாற்று தேதி வழங்கக்கோரியும் ஜெகத்ரட்சகன் தரப்பு கேட்டுக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 'முதலில் அறிவிக்கப்பட்டவரே வெற்றியாளர்!'

Last Updated : Oct 28, 2020, 4:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details