தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பெண் எஸ்பி பாலியல் வழக்கு தொடர்பா 50 பேரிடம் விசாரணை - தமிழ்நாடு அரசு

சென்னை: பெண் காவல் கண்காணிப்பாளருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சிறப்பு டிஜிபி மீதான புகாரின் அடிப்படையில் 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Cbcid inquiry is good manner in SP harassment case, state reply
Cbcid inquiry is good manner in SP harassment case, state reply

By

Published : Mar 10, 2021, 3:03 PM IST

பெண் காவல் கண்காணிப்பாளருக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகச் சிறப்பு காவல் துறைத் தலைவருக்கு எதிரான வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்துவருகிறது.

இந்நிலையில், ஐபிஎஸ் அலுவலர்கள் சம்பந்தப்பட்டுள்ளதால், இந்த வழக்கை மத்தியப் புலனாய்வு அமைப்புக்கு மாற்றக்கோரி, சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் கூடுதல் கண்காணிப்பாளர் கே. ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளதாகவும், விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் என உத்தரவிட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசுத் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க விசாகா குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு தொடர்பாக 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், காணொலி ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க...தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021- முதன்மை தகவல்கள் உடனுக்குடன்...

ABOUT THE AUTHOR

...view details