தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிவசங்கர் பாபா வழக்கு - லேப்டாப்பில் உள்ள தரவுகளை வைத்து விசாரணை நடத்த திட்டம் - பேப்டாப்பிலுள்ள தரவுகள்

சிவசங்கர் பாபாவின் அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட மடிக்கணினியில் உள்ள தரவுகளின் அடிப்படையில் ஆசிரியைகளிடம் சிபிசிஐடி அலுவலர்கள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவசங்கர் பாபா வழக்கு
சிவசங்கர் பாபா வழக்கு

By

Published : Jul 31, 2021, 9:48 AM IST

சென்னை:சுசில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா, பாலியல் தொல்லை கொடுப்பதாக முன்னாள் பள்ளி மாணவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை காவல் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பின்னர், சிவசங்கர் பாபாவின் அறையில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் சிவசங்கர் பாபாவின் அறையிலிருந்த மடிக்கணினி, கணினி, சிபியூக்கள் உள்ளிட்டவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

முன்னதாக சிவசங்கர் பாபாவுக்கு உதவி செய்வதாகக் கூறி சுசில் ஹரி பள்ளியைச் சேர்ந்த தீபா, பாரதி உள்பட ஐந்து ஆசிரியைகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

ஆசிரியைகளிடம் விசாரணை

வழக்கு தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐந்து ஆசிரியைகளும் ஆஜராகி, கையெழுத்திட வேண்டும் எனவும் செங்கல்பட்டு அனைத்து மகளிர் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்திருந்தது. அதனைத் தொடர்ந்து ஐந்து ஆசிரியைகளும் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர்.

இந்நிலையில், வருகிற ஆகஸ்ட் 2ஆம் தேதி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகவுள்ள தீபா உள்பட ஐந்து ஆசிரியைகளிடமும், சிவசங்கர் பாபாவின் அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப்பில் உள்ள தரவுகளின் அடிப்படையில் சிபிசிஐடி அலுவலர்கள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'ஏ கிளாஸ்' அறை கேட்ட சிவசங்கர் பாபா - 'நோ' சொன்ன நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details