தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை ஐஐடி மாணவி பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சிபிசிஐடிக்கு மாற்றம்
சிபிசிஐடிக்கு மாற்றம்

By

Published : Apr 12, 2022, 8:23 AM IST

சென்னை: ஐஐடியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவி கடந்த 2017 ஆம் ஆண்டு உடன் பயின்ற மாணவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜுன் மாதம் முன்னாள் ஆராய்ச்சி மாணவர்களான கிங்சுக் தேப் சர்மா, சுபதீப் பேனர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ உட்பட 8 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து எஸ்.சி, எஸ்.டி சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டது. கோட்டூர்புரம் உதவி ஆணையர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த வழக்கில் முதல் நபராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கிங்சுக் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

உடனே ஜாமீனில் அவர் வெளிவந்தார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'உதயநிதியை துணை முதலமைச்சராக்க ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார்' - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

ABOUT THE AUTHOR

...view details