தமிழ்நாடு

tamil nadu

காவேரி கூட்டு குடிநீர் திட்ட அறிக்கை பெறப்பட்டுள்ளது - அமைச்சர் கே.என்.நேரு

By

Published : Apr 20, 2022, 2:23 PM IST

காவேரி கூட்டு குடிநீர் திட்ட அறிக்கை பெறப்பட்டு 9,660 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தபட உள்ளதாக நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கே.என்.நேரு
அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்.20) கேள்வி நேரத்தின் போது துணை சபாநாயகர் பிச்சாண்டி, கீழ்பென்னாத்தூர் தொகுதி, வேட்டவலம் பேரூராட்சிக்கு, ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமாா என கேள்வி எழுப்பினார். மேலும் பேரூராட்சிகள் மாநிலம் முழுவதும் தாயில்லா பிள்ளையாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, "கடந்த 10 ஆண்டுகளாக பேரூராட்சி பகுதிகளில் ஓரளவு பணிகள் தான் நடைபெற்று உள்ளது. 490 பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் தேவை அருகில் இருக்கும் குடிநீர் ஆதாரங்கள் மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

130 பேரூராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு குடிநீர் திட்டங்களை செயல்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும் திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்கள் பயன் பெறக்கூடிய வகையில் 9,660 கோடி ரூபாய் செலவில் புதிய காவேரி கூட்டு குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான திட்ட அறிக்கை பெறப்பட்டுள்ளது. முதலமைச்சருடன் கலந்து பேசி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க:ஆளுநர் மீது ஒரு தூசு கூட விழாதவாறு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details