கோவை மாவட்டம் இடிகரை பகுதியில் அமைந்துள்ளது பள்ளிக்கொண்ட பெருமாள் கோயில். கி.பி 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும் தேர் திருவிழா நடைபெறும். இத்திருவிழாவில், 150 ஆண்டுகள் பழமையான இரண்டு தேர்கள் பயன்படுத்தபட்டு வந்தன. 2019ஆம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்ட அந்த தேர்கள் பாழடைந்துவிட்டதாக கூறி, அவற்றை கைவிடவும், அவற்றிற்கு மாற்றாக புதிய தேர்களை செய்ய கோயில் செயல் அலுவலர் முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்துசமய அறநிலையத்துறை ஆணையருக்கு கோயில் செயல் அலுவலர் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில், அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், இம்முடிவானது ஆகம விதிகளுக்கும் முரணாக இருப்பதாகக் கூறி அதற்கு தடை விதிக்க கோரி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அம்மனுவில், “தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் கைவிடப்பட்ட தேர்களில் உள்ள புராதன சிலைகள், பொருள்கள் திருடப்பட்டு வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகிவருகிறது. இந்நிலையில், 150 ஆண்டுகள் பழமையான இரண்டு தேர்களுக்கு பதிலாக புதிய தேர்கள் செய்வதற்காக பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து ஏறத்தாழ மூன்று கோடி ரூபாய் வரை நன்கொடை வசூலிக்கப்பட்டுள்ளது.