தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் மீது வழக்கு - லஞ்ச ஒழிப்புத் துறை

தாம்பரத்தில் வனப்பகுதிக்குச் சொந்தமான நிலத்தை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்து கொடுத்த தாம்பரம் சார் பதிவாளர் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

case registered against sub registrar
சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் மீது வழக்கு

By

Published : Feb 18, 2022, 1:29 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்படாத மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்தது தொடர்பாக பத்திரப்பதிவுத்துறை தலைமை அலுவலகம் சிறப்பு குழு ஒன்று அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரனையில் தொடர்ந்து பல சார்பதிவாளர்கள் சிக்கி வருகின்றனர். அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தாம்பரம் சார் பதிவாளர் வெங்கடசுப்ரமனியன் என்பவர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

சர்வே எண் 392/1, தாம்பரம் பகுதியில் வனப்பகுதிக்குச் சொந்தமான இடங்கள் உள்ளது. இந்த வனப் பகுதிக்குச் சொந்தமான நிலங்களை எட்டு விதமான பத்திரப்பதிவு மூலம் போலியான ஆவணங்கள் பயன்படுத்தி ஆகிரமிப்பு செய்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

குறிப்பாக, இரண்டு விற்பனைப் பத்திரம் மற்றும் 6 செட்டில்மெண்ட் பத்திரப் பதிவு செய்து வனப்பகுதிக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தது தெரியவந்துள்ளது. போலியான ஆவணங்கள் மூலம் வனப் பகுதியை ஆக்கிரமித்து முறைகேடாக பத்திரப்பதிவு செய்ய உடந்தையாக இருந்த ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இதையும் படிங்க: ஓஎன்ஜிசியின் தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன - ஆய்வு குழு அறிக்கை

ABOUT THE AUTHOR

...view details