தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஜெய்பீம் படக்குழு மீது காப்புரிமை சட்ட அடிப்படையில் வழக்குப்பதிவு - ஜெய்பீம் திரைப்படக் குழுவினர்

ஜெய்பீம் திரைப்படக் குழுவினர் மீது காப்புரிமைச் சட்ட விதிகளின் அடிப்படையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

ஜெய்பீம் படக்குழு மீது காப்புரிமை சட்ட அடிப்படையில் வழக்குப்பதிவு
ஜெய்பீம் படக்குழு மீது காப்புரிமை சட்ட அடிப்படையில் வழக்குப்பதிவு

By

Published : Aug 25, 2022, 8:58 AM IST

சென்னை: நடிகர் சூர்யா தயாரித்து நடித்து பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ஜெய் பீம். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றியைப் பெற்று விருதுகளை குவித்தது. இத்திரைப்படத்தின் உண்மை கதாப்பாத்திரமான ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு 2D தயாரிப்பு நிறுவனம் சார்பில் நிவாரணத் தொகைகள் வழங்கப்பட்டது.

அதேபோல இத்திரைப்படத்தின் மற்றொரு உண்மை கதாப்பாத்திரமும், ராஜாகண்ணுவின் சகோதரி மகனுமான கொளஞ்சியப்பன் என்பவர் தனக்கும், தனது குடும்பத்திற்கும் நடந்த உண்மைச் சம்பவங்களை திரைப்படத்தில் காட்டியதற்காக தங்களுக்கும் உரிமைத் தொகை வழங்கக்கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கின் அடிப்படையில் வரும் 26ஆம் தேதிக்குள் சாஸ்திரி நகர் போலீசார் மனுதாரரான கொளஞ்சியப்பன் சுட்டிக் காட்டியுள்ள நடிகர் சூர்யா, அவரது 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் உட்பட சம்மந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் மற்றும் 2d நிறுவனம் மீது சாஸ்திரி நகர் போலீசார் காப்புரிமைச் சட்டத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அடுத்தகட்டமாக 26ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு உண்டான அறிக்கையை சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும் போலீசார் தாக்கல் செய்யவுள்ளனர்.

இதையும் படிங்க: ரூட்டு தல பிரச்னை... மாநிலக்கல்லூரி மாணவர்கள் மோதல்

ABOUT THE AUTHOR

...view details