தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விநாயகர் ஊர்வலம்... பாஜக, இந்து முன்னணியினர் மீது வழக்குப்பதிவு.... - 29 people have been booked under 3 sections

சென்னையில் தடையை மீறி விநாயகர் ஊர்வலம் நடத்தியதாக இந்து முன்னணி மாநில பொது செயலாளர் இளங்கோவன், பாஜக விளையாட்டு மற்றும் மேம்பாட்டுத்துறை தலைவர் அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Etv Bharatதடையை மீறி விநாயகர் ஊர்வலம் சென்ற பாஜகவினர் மீது வழக்குப்பதிவு
Etv Bharatதடையை மீறி விநாயகர் ஊர்வலம் சென்ற பாஜகவினர் மீது வழக்குப்பதிவுதடையை மீறி விநாயகர் ஊர்வலம் சென்ற பாஜகவினர் மீது வழக்குப்பதிவு

By

Published : Sep 5, 2022, 11:26 AM IST

சென்னையில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்ட சிலைகள் நேற்று(செப்-4) ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டு திருவான்மியூர், காசிமேடு, பாலவாக்கம், பட்டினப்பாக்கம் ஆகிய கடற்கரைகளில் கரைக்கப்பட்டன. எந்த வித அசாம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க ஏற்கனவே ஊர்வலமாக செல்லக்கூடிய பாதைகளை போலீசார் குறிப்பிட்டிருந்தனர். அதிலும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை பகுதி பதற்றமான பகுதியாக கண்டறியப்பட்டு அந்த சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இந்து முன்னணி அமைப்பின் பொது செயலாளர் முருகானந்தம் தலைமையில் மாநகர தலைவர் இளங்கோவன், பாஜக விளையாட்டு அணி தலைவர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 29 பேர் தடையை மீறி திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் நேற்று ஊர்வலமாக சென்றனர். இதனால் அவர்கள் 29 பேரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் 29 பேர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் ஜாம்பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க:சிறுவர்களின் விநாயகர் ஊர்வலத்திற்கு போலீஸ் தடை - நீதிமன்றம் சென்று அனுமதி பெற்ற சிறுவர்கள்

ABOUT THE AUTHOR

...view details