சென்னை: ஒமைக்ரான் பரவல் காரணமாக பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், புதுச்சேரியில் இதுவரை தடை ஏதும் விதிக்கப்படவில்லை.
இந்நிலையில், புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கக் கோரி, கரிகாலம்பாக்கம் என்னும் ஊரை சேர்ந்த ஜெகன்நாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கள நிலவரத்தை அறியாமல் அனுமதி
அந்த மனுவில், கரோனா ஊரடங்கு தாக்கத்திலிருந்து மீண்டு வரும் நிலையில், அடிப்படை கள நிலவரத்தை கருத்தில் கொள்ளாமல் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியளித்துள்ளதாகவும், ஏற்கனவே யூனியன் பிரதேசத்தில் இருவர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது.