சென்னை:காவல் ஆணையர் அலுவலகத்தில், வீரத் தமிழர் பேரவையின் தலைவர் தங்க.பாஸ்கரன், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீது புகார் ஒன்று அளித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தங்க.பாஸ்கரன் "விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த பரப்புரை கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாடு காவல்துறை குறித்து தகாத வார்த்தையில் பேசினார்.
முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீது புகார் - cv shanmugam campaign speech
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் காவல்துறையை மிரட்டும் விதமாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
former AIADMK minister CV Shanmugam
இதுபோன்று பொதுவெளியில் தகாத வார்த்தையில் பேசிவருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். முன்னதாக சி.வி. சண்முகம் மீது விழுப்புரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:’ நகைக்கடன் தள்ளுபடி திட்டம் ஏமாற்று வேலை’ - சிவி சண்முகம்