சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், அதிமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த ஸ்ரீராஜலட்சுமி கடந்த 9ஆம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், "திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட கூட்டம் ஒன்றில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவி வாங்கியதாகவும் பெண்களை இழிவுப்படுத்தும் விதமாகவும் பேசினார்.
உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு - udayanithi stalin
17:09 January 12
முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாகக் கூறி திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதுகுறித்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. எனவே, உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில், கலகத்தை தூண்டிவிடுதல்,பொது இடத்தில் அவதூறு கருத்துகளைப் பரப்புதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க:ஸ்டாலின், உதயநிதியை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!