தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பாஜக இளைஞரணி தலைவர் மீது வழக்குப்பதிவு - Case filed against BJP youth wing leader

சமூக வலைதளங்களில் திமுக அரசு குறித்து அவதூறாக விமர்சனம் செய்ததாக பாஜக இளைஞரணி தலைவர் மீது 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Case filed against BJP youth wing leader
Case filed against BJP youth wing leader

By

Published : Jan 28, 2022, 12:34 PM IST

சென்னை:சென்னை கீழ்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில்,

பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ்.பி. செல்வம் என்பவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்த 200 நாட்களில் 130 இந்து கோயில்களை இடித்துள்ளதாகவும், உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு ஆதரிப்பீர் என்று பதிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

பொய்யான தகவலை வினோஜ் பி செல்வம் பொதுமக்களிடையே பரப்பி, மதக் கலவரத்தை ஏற்படுத்தி அமைதியைக் குலைக்கும் வகையில் இந்த பதிவு அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இதனால் உடனடியாக வினோஜ்.பி.செல்வம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு

இதுதொடர்பான புகாரை விசாரித்த மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார்கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வினோஜ் பி செல்வத்தின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்க்கும் வகையிலோ, பொது அமைதியைக் குலைக்கும் வகையிலோ, பொய்யான செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:கோவை மாவட்ட ஆட்சியருக்கு கரோனா தொற்று

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details