புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி நேற்று அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தினர். அப்போது, ’தேர்தலில் தோற்றதற்கான காரணங்களை பற்றி நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு நீ எந்த ஊரு... எந்த சாதி... என்று கிருஷ்ணசாமி கேட்டார். இதனால் பத்திரிகையாளர் சந்திப்பில் சலசலப்பு ஏற்பட்டு கட்சியினருக்கும் நிருபர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் அவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தமிழ்வேந்தன் சென்னை காவல் ஆணையரிடம் இன்று புகார்மனு அளித்தார்.
செய்தியாளரிடம் 'சாதி' கேட்ட கிருஷ்ணசாமி மீது போலீசில் புகார்! - கிருஷ்ணசாமி
சென்னை: பத்திரிகையாளரை நோக்கி ‘ நீ என்ன சாதி’ என கேட்ட புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மீது மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில், "செய்தியாளர் கேட்ட கேள்விக்கு உரிய பதில் அளிக்காமல், அவர்களைப் பார்த்து நீ எந்த சாதி... எந்த ஊர்... என்று ஒற்றை சொல்லில் மிரட்டும் தொனியில் கேட்டது, பொதுவெளியில் சாதி பற்றி கேட்பது சட்டவிரோதம். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்தில் அவர் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது.
மனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் பேசுவது சட்டவிரோதம். ஒரு பத்திரிகையாளரிடமே இது போன்று பேசும் இவர், எப்படி பொதுநலத்தோடு மருத்துவம் செய்வார். பொதுமக்களிடம் எப்படி பழகுவார். ஆகையால் உடனடியாக கிருஷ்ணசாமியை கைது செய்து மருத்துவ கவுன்சிலிங்-க்கு உட்படுத்த வேண்டும். அவரின் மருத்துவ அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கவும் தேர்தல் கமிஷனுக்கு அறிவுறுத்த வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.