தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

எங்க போனாலும் விடமாட்டேன்...கனிமொழி மீதான வழக்கில் தமிழிசை தரப்பு பதில் - former tn bjp-leader tamilisai

சென்னை: தெலங்கானா மாநில ஆளுநராக பதவி வகித்தாலும்கூட, திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கு தொடர்ந்து நடத்தப்படும் என்று தமிழிசை செளந்தரராஜன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamil isai

By

Published : Sep 18, 2019, 6:17 PM IST

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி வேட்புமனுவில் கணவரின் வருமானத்தை தெரிவிக்காததால், அவரின் வெற்றியை செல்லாது என அறிவிக்ககோரி, அதே தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனும், வாக்காளர் சந்தானகுமாரு சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

மக்கள் ஒரு வேட்பாளரை பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக வேட்புமனுவில் வருமான விவரங்கள் கேட்கப்படும் நிலையில், தன் கணவர் வருமானத்தை மறைந்தது தவறு எனவும், பரப்புரையின்போது ஆரத்தி எடுத்தவர்களுக்கு 2000 ரூபாய் பணமாக வழங்கியதாகவும் சந்தானகுமார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இன்று வாக்காளர் சந்தானகுமார் தொடர்ந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழிசை சௌந்தரராஜன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், தமிழிசை தற்போது தெலங்கானா மாநில அளுநராக பதவி வகிக்கிறார். எனினும் எங்கள் தரப்பில் கனிமொழி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தொடர்ந்து நடத்தப்படும்.

இதே போன்று தூத்துக்குடி தொகுதியைச் சேர்ந்த சந்தானகுமார் என்பவர் தனியாக ஒரு தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே, இந்த வழக்கையும் அதனுடன் சேர்த்து பட்டியலிடுமாறு தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இரு வழக்குகளிலும் கனிமொழி உட்பட எதிர்மனுதாரர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பும் நடவடிக்கையை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தி வழக்கு விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details