சென்னை:ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் மீரா மைதீன். தொழிலதிபரான இவர், மலேசியாவில் ஹோட்டல் உள்ளிட்டவை நடத்தி வருகிறார். இந்நிலையில் 1982 ஆம் ஆண்டு விஜிபி கோல்டன் பீச் பகுதியில் 5 கிரவுண்ட் நிலம் வாங்கியுள்ளார்.
இந்த நிலத்தை சென்னையில் வாங்கிய பிறகு தொடர்ந்து, அதை கண்காணிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு தொழிலதிபர் மீரா மைதீன் உயிரிழந்தார்.
இதனையடுத்து மலேசிய அரசு அவர் இறந்ததாக கொடுத்த சான்றிதழ் அடிப்படையில், அவரது மனைவி மற்றும் மகள்களுக்கு சென்னையில் வாங்கப்பட்ட சொத்துகள் மாற்றப்பட்டன.
குறிப்பிட்ட நீலாங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட 5 கிரவுண்ட் மற்றும் 2,388 சதுர அடி கொண்ட சொத்தை பராமரிப்பதற்காக, ராமநாதபுரத்தில் உள்ள மீரா மைதீன் தந்தை முகமது இஸ்மாயிலுக்கு பொது அதிகாரம் வழங்கியுள்ளனர்.
இது தொடர்பாக மலேசியாவில் இருக்கும் மீரா மைதீன் மனைவி மற்றும் மகள்களுக்கு தெரியவந்துள்ளது. எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2018 ஆம் ஆண்டு நீலாங்கரை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.