தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முறைகேடாக சொத்து சேர்த்த காவல் ஆய்வாளர் மீது வழக்கு - காவல் ஆய்வாளர்

கோயம்புத்தூரில் முறைகேடாக சொத்து சேர்த்த சூலூர் முன்னாள் காவல் ஆய்வாளர் தங்கராஜ் மீது லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முறைகேடாக சொத்து சேர்த்த காவல் ஆய்வாளர் மீது வழக்கு
முறைகேடாக சொத்து சேர்த்த காவல் ஆய்வாளர் மீது வழக்கு

By

Published : Sep 6, 2021, 8:29 AM IST

கோயம்புத்தூர்:திண்டுக்கல் கன்னிவாடி காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் தங்கராஜ். இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையம், கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலையம் ஆகியவற்றில் பணிபுரிந்து வந்தார்.

மேலும், இவர் 2010ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக முறைகேடாக சொத்து சேர்த்தாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பல்லடம் பகுதியைச் சேர்ந்த விவசாயி கந்தசாமி என்பவர் தமிழ்நாடு லோக் ஆயுக்தாவில் புகார் கொடுத்தார்.

ஆய்வாளர் மீது நடவடிக்கை

தமிழ்நாடு லோக் ஆயுக்தாவில் இருந்து இந்த புகார் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் மூன்று ஆண்டு காலத்தில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஆய்வாளர் தங்கராஜ் தனது பெயரிலும், மனைவி பூங்கொடி பெயரிலும் சொத்துகள் சேர்த்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து ஆய்வாளர் தங்கராஜ் மீது கோவை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அலுவலருக்கு இரண்டு ஆண்டு சிறை

ABOUT THE AUTHOR

...view details