தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நாளொன்றுக்கு ரூ. 500 உதவித்தொகை - வாடகை வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை

சென்னை: வருமானம் இன்றி தவிக்கும் தங்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் என கார், வேன் ஓட்டுநர் நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

drivers
drivers

By

Published : Jun 9, 2020, 6:45 PM IST

இது தொடர்பாக கார், வேன் ஓட்டுநர் நலச் சங்கத்தினர் இன்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் மூலம் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அச்சங்கத்தின் தலைவர் வெங்கடேசன், ”ஊரடங்கால் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வாடகை வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்களாகிய எங்களுக்கு, நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் உதவித்தொகையை மாநில பேரிடர் நிதியிலிருந்து அரசு ஒதுக்கீடு செய்ய வலியுறுத்துகிறோம்.

வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளால் தொழில் பாதித்துள்ள அனைத்து வாடகை வாகனங்களுக்கும், இந்த அறையாண்டிற்கான சாலை வரியை முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

மற்ற நலவாரிய உறுப்பினர்களுக்கு அறிவித்ததுபோல், அறியாமையால் நலவாரிய உறுப்பினர்களாக பதிவு செய்திராத ஓட்டுநர்களுக்கும் அரசு உதவித்தொகை அறிவித்திட வேண்டும். மேலும், வாரியங்களில் உறுப்பினராவதற்கு சிறப்பு முகாம் நடத்தி அனைவரும் பதிவு செய்ய வழிவகை செய்ய வேண்டும்“ எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: நாளை முதல் மண்டலங்களுக்குள் தனியார் பேருந்து சேவை!

ABOUT THE AUTHOR

...view details