தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை; காருடன் ரூ.5 லட்சம் திருட்டு - போலீஸ் விசாரணை - சென்னை செய்திகள்

சென்னையில் சிகிச்சைக்காக வந்த நபரின் கார், ரூ.5 லட்சம் பணம் ஆகியவற்றை திருடிச் சென்ற நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னையில் கார் திருட்டு
சென்னையில் கார் திருட்டு

By

Published : Oct 22, 2021, 6:31 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினத்தைச் சேர்ந்தவர் அஹமது இப்ராகிம் (44). இவர் சுமங்களி ஜூவல்லர்ஸ் என்ற நகைக் கடையை நடத்திவருகிறார்.

இவருக்கும் கௌசியா பேகம் என்பவருக்கும் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, குழந்தை இல்லாத நிலையில் சிகிச்சைக்காக சென்னை சேத்துப்பட்டில் உள்ள மருத்துவமனை தனியார் மருத்துவமனையில் சிகிப்புச் பெற்று வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று (அக்.21) அஹம்மது இப்ராஹிம் தனது மனைவியுடன் காரில் வந்துள்ளார். தனது உறவினர் மகனான முஹம்மது பாருக் என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில் சிகிச்சை முடிந்தபின் காரின் ஓட்டுநரான பாருக் என்பவருக்கு போன் செய்துள்ளார்.

அவரது போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதும் காரையும் காரினுள் இருந்த 5 லட்சம் ரூபாய் பணத்தையும் முஹம்மது பாருக் எடுத்து சென்றுவிட்டார் எனத் தெரியவந்தது.

இதனையடுத்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்க, வழக்குப்பதிவு செய்த காவல் துறையஞர், லட்சம் பணத்துடன் தப்பிச்சென்ற உறவினரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:மூதாட்டியை நூதன முறையில் திசை திருப்பி 10 சவரன் நகைகள் கொள்ளை

ABOUT THE AUTHOR

...view details