தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சாலையில் தீப்பற்றி எரிந்த கார்! - காரில் தீ

சென்னை: சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில், அதில் சென்ற நான்கு பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

fire
fire

By

Published : Sep 9, 2020, 2:41 PM IST

தாம்பரத்தை அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (35). இவர் தனது உறவினர்களுடன் காரில் பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம் நோக்கி சென்றார். ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, காரின் முன் பக்கத்திலிருந்து புகை வந்துள்ளது. இதையடுத்து விக்னேஷ் சாலையின் ஓரமாக காரை நிறுத்தியுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக காரில் திடீரென தீப்பற்றியுள்ளது. விக்னேஷ் மற்றும் அவருடன் பயணித்த மற்ற மூவரும் சுதாரிப்பதற்குள் தீ மளமளவென பற்றி எரியத் தொடங்கியிருக்கிறது. அதிர்ச்சி அடைந்த நான்கு பேரும் தீயை அணைக்க முயற்சி செய்ததுடன், சானடோரியம் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

சாலையில் தீப்பற்றி எரிந்த கார்!

உடனே அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைப்பதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. கார் தீப்பிடிக்கும் முன்பாகவே, அதிலிருந்து இறங்கியதால் நல்வாய்ப்பாக விக்னேஷ் உள்ளிட்ட நான்கு பேரும் உயிர் தப்பினர். இதனால் ஜிஎஸ்டி சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு - சென்னை மெட்ரோ நிர்வாகம்

ABOUT THE AUTHOR

...view details