சென்னை:கிழக்கு தாம்பரம் அடுத்த ஆனந்தபுரம் ஜெகஜீவன்ராம் தெருவைச் சேர்ந்தவர் முருகன்(30). இவருடைய மனைவி பிரியா(24) இவர்களுக்குத் திருமணமாகி ஒரு வருடம் ஆகிய நிலையில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்த நிலையில் முருகன் ஆன்லைனில் தொடர்ந்து ரம்மி விளையாடி வந்ததால், அதில் பல லட்சம் ரூபாய் பணம் இழந்து உள்ளார். மேலும் முருகன் பல இடங்களில் கடன் வாங்கி உள்ள நிலையில், கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர்.
இதனால் மிகுந்த மன உளைச்சலில் ஆளான முருகன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தனது அறையில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.