தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விமானநிலையம் அருகே சாலையில் தீப்பிடித்த கார்! - நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்

சென்னை: விமான நிலையம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரெனத் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

chennai-international-airport

By

Published : Nov 19, 2019, 4:07 PM IST

சேலத்தை சேர்ந்த உமா,கமலேஸ்,மதன் ஆகிய மூவரும், சுந்தரமூர்த்தி என்பவரின் காரில் மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர். சென்னை விமான நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது, காரின் முன்பக்கத்தில் திடீரென புகை வந்துள்ளது.

இதையறிந்த ஓட்டுநர் சுந்தரமூர்த்தி மேம்பாலத்திலேயே காரை நிறுத்திவிட்டு, காரிலிருந்த அனைவரையும் கீழே இறக்கிவிட்டுள்ளார். அதற்குள், கார் மளமளவென எரியத் தொடங்கியது.

இதனையடுத்து, விமானநிலையத்தில் உள்ள ராட்சத தீயணைப்பு வாகனம் மற்றும் கிண்டி தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் கார் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. இவ்விபத்தில், காரில் பயணம் செய்த ஓட்டுநர் உட்பட 4 பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இதனையடுத்து, பரங்கிமலை போக்குவரத்துப் புலனாய்வுத் துறையினர் விபத்துக்குறித்து வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்

இந்த விபத்தினால், விமான நிலையம் எதிரே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

இதையும் படிங்க: திமுக விருப்பமனு தாக்கல் கால அவகாசம் நீட்டிப்பு: க. அன்பழகன் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details