நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த சினேகா என்ற இளம்பெண், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்து மற்றும் உடல்தகுதி தேர்வில் வெற்றி பெற்றதாகவும், சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பணியில் சேர இருந்த தருவாயில், தன் மீது கடந்த 2016ஆம் ஆண்டு பதியப்பட்ட குற்ற வழக்கை காரணம் காட்டி காவலர் பணி வழங்க முடியாது என நாகப்பட்டினம் எஸ்பி உத்தரவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
2016 ஆம் ஆண்டு தனது தாய், சகோதரி மற்றும் நாத்தனார் ஆகியோருக்கிடையே நடைபெற்ற மாமியார், மருமகள் குடும்பச் சண்டையில், அப்போது மைனராக இருந்த தனது பெயரையும் குற்ற வழக்கில் காவல் துறையினர் சேர்த்துவிட்டதாகவும், பின்னர் சமரசம் ஏற்பட்ட நிலையில் தனக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருந்தார்.