சென்னை:திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இரண்டாம் பிரகாரத்தில் பக்தர்கள் பிரதட்சணம் (வலம் வர) ஏற்பாடு செய்யக் கோரி ரங்கராஜன் நரசிம்மன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயிலுக்கு வரும் பக்தர்களை பேருந்து நிலையத்தில் வைத்து தரிசனத்துக்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறி, 500 ரூபாய் வரை இடைத்தரகர்களால் வசூலிக்கப்படுவதாக மனுதாரர் குற்றம்சாட்டினார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், கடவுளுக்கும், பக்தர்களுக்கும் இடையில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை எனவும், இதை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.