தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரூ. 2 கோடி மதிப்பிலான கஞ்சா அழிப்பு - சென்னை மாவட்ட செய்திகள்

1300 கிலோ எடையுள்ள 2 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா மற்றும் போதை பொருள்களை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முன்னிலையில் அழிக்கப்பட்டது.

போதை பொருட்கள் அழிப்பு
போதை பொருட்கள் அழிப்பு

By

Published : Jun 25, 2022, 5:13 PM IST

செங்கல்பட்டு: தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட போதைப்பொருள் வேட்டையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. இவை வழக்குக்காக நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. வழக்கு முடிவடைந்து மேல்முறையீட்டு காலமும் முடிந்த 58 வழக்குகள் சம்பந்தப்பட்ட போதை பொருள்களை தீயிட்டு அழிக்க போதைப்பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் உத்தரவு பெறப்பட்டது.

இதனையடுத்து இன்று (ஜூன் 25) செங்கல்பட்டு மாவட்டம் தென் மேல்பாக்கம் என்ற இடத்தில் உள்ள ரசாயன ஆலையில் ஆயிரத்து 300 கிலோ எடையுள்ள கஞ்சாவை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் முன்னிலையில் தீயிட்டு அழிக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 2 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கோயில் குளத்தில் குளிக்கச் சென்ற முதியவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details