தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிட கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதியிலிருந்து கட்சியினரிடமிருந்து விருப்பமனு பெறப்பட்டது. விருப்பமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று வரை, சுமார் 1,300 க்கும் மேலான மனுக்கள் வந்துள்ளதாகக் கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
மேலும், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன் விஜய பிரபாகரன், அவரது தம்பியும் துணைச் செயலாளருமான எல்.கே. சுதீஷ் ஆகியோரும் விருப்பமனு அளித்துள்ள நிலையில், அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வராததால், எந்தத் தொகுதியில் போட்டியிட உள்ளனர் என்ற விவரத்தை பூர்த்தி செய்யாமல் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்தவர்களிடம் நாளை முதல் 8 ஆம் தேதி வரை நேர்காணல் நடைபெற உள்ளதாகவும், நாளைய நேர்காணலில் கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தேனி, கோவை, ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து விண்ணப்பித்தவர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் தேமுதிக தலைமை அறிவித்துள்ளது. பிற்பகலில், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிம் நேர்காணல் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'2 நாள்களில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடையும்' - தேமுதிக