தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

11,12ஆம் வகுப்பில் கணினி அறிவியல் பிரிவுக்கட்டணம் ரத்து! - Computer

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்பப்பாடமாக படிக்கும் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட தனிக் கட்டணம் 200 ரூபாய் ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

11,12  வகுப்பில் கணினி அறிவியல் பிரிவு கட்டணம் ரத்து
11,12 வகுப்பில் கணினி அறிவியல் பிரிவு கட்டணம் ரத்து

By

Published : Jun 28, 2022, 10:20 PM IST

சென்னை: அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்பப்பாடமாக படிக்கும் மாணவர்களிடம் வசூல் செய்யப்பட்ட தனிக்கட்டணம் 200 ரூபாய் ரத்து செய்யப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, '2022-23ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கையின்போது, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்பப்பாடமாக பயிலும் மாணவர்களிடம் 2022-23ஆம் கல்வி ஆண்டில் இருந்து ரூ.200 தனிக்கட்டணமாக வசூலிக்கப்படுவது முழுமையாக ரத்து செய்யப்படும்.

இதனால் ஆண்டுதோறும் 3 லட்சம் மாணவர்கள் பயன் அடைவார்கள். இதற்காக ஆகும் செலவினம் 6 கோடியை அரசு ஏற்கும்’ என அறிவித்துள்ளார்.

இதனை செயல்படுத்தும் விதமாக பள்ளி கல்வித்துறைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில்,

’அரசுப் பள்ளிகளில் மேல்நிலை வகுப்பில் கணினி அறிவியலை விருப்பப் பாடமாக படிக்கும் மாணவர்கள் செலுத்தும் தனிக்கட்டணம் ரூ.200 நடப்பு 2022-23ஆம் கல்வி ஆண்டில் இருந்து ரத்து செய்யப்படுகிறது. இதனால் லட்சத்து 50ஆயிரம் மாணவர்கள் பயன் அடைவார்கள். இதற்கான கட்டணத்தை அரசு செலுத்தும்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்!

ABOUT THE AUTHOR

...view details