மதுரை மாவட்டம் ஹார்விபட்டியில் சுப்புராம், நல்லம்மாள் தம்பதியினருக்கு பிறந்தவர் வெங்கடேசன். பன்னிரெண்டாம் வகுப்பு விடுமுறையில் தனது முதல் கவிதை நூலினை வெளியிட்டுள்ளார். இளங்கலை வணிகவியல் படித்த இவர், இதுவரை நான்கு கவிதை தொகுப்புகள், ஐந்து கட்டுரை தொகுப்புகள், இரண்டு புதினங்கள், ஒரு கிராஃபிக் நாவல் எழுதியிருக்கிறார்.
இவர் எழுதிய முதல் நாவலான காவல் கோட்டம் நூலுக்கு 2011ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்ற இளம் எழுத்தாளர் என்ற பெருமையை தன்னகத்தே வைத்திருக்கிறார். இந்த நாவல் வசந்தபாலன் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு அரவான் படமாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி இவர் ஆனந்த விகடனில் 111 வாரங்கள் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரியின் தொடரை வாசகர்கள் தமிழ்நாடு இலக்கிய சரித்திரத்தில் இதுவரை காணாத வகையில் வரவேற்றார்கள். இவரை மார்க்சிய பொதுவுடமைக் கட்சியின் முழுநேர ஊழியர். அத்துடன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத்தலைவர்.