சென்னை:தமிழ்நாடு அரசின் நதிநீர் இணைப்பு திட்டங்கள் மீது இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறையின் (சிஏஜி) 2018ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கையில்,'தமிழ்நாட்டில் உள்ள நதிகளை இணைப்பதன் மூலம் நீர்வள ஆதாரங்களை மேம்படுத்தலாம் என கொள்கை வகுக்கப்பட்டு எட்டு நதிகளை இணைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
இதில் இரண்டு திட்டங்களுக்கு 2008-இல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில், 6 திட்டங்கள் கிடப்பில் உள்ளன.
மீதமுள்ள 6 திட்டங்கள்
- தாமிரபரணி- கருமேனி ஆறு நம்பியாறு இணைப்பு திட்டம்;
- காவிரி- அக்னி ஆறு - தெற்கு வெள்ளாறு - மணிமுத்தாறு இணைப்பு திட்டம்;
- பெண்ணை ஆறு - பாலாறு இணைப்பு திட்டம்;
- வெள்ளாறு - சுவேதா நதி - போனேரி - காவிரி இணைப்பு திட்டம்;
- சோலையாறுப்பட்டி - அக்னி ஆறு இணைப்பு திட்டம்;
- தாமிரபரணி - கடானா - சித்தாறு - உப்போடை - கல்லாறு இணைப்பு திட்டம்