தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம்: இந்திய கணக்காய்வு தணிக்கை - தமிழ்நாடு அரசு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஆதரவற்றோர், இலங்கை அகதிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் முறையாக சேர்க்கப்படவில்லை என 2019ஆம் ஆண்டுக்கான இந்திய கணக்காய்வு தணிக்கை (சிஏஜி) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

cag report,  இந்திய கணக்காய்வு தணிக்கை
முதலைமச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம்

By

Published : Jun 25, 2021, 8:04 PM IST

சென்னை:தமிழ்நாடு அரசு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்பாடுகள் மீதான இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறையின் 2019ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கையில், ”மாநிலத்திலுள்ள 1,235 அரசு, தனியார் ஆதரவற்றோர் இல்லங்களில் 55 ஆயிரத்து 384 ஆதரவற்றோர் இருந்தனர்.

விடுபட்டவர்கள்

இதில் அரசு நடத்திய இல்லங்களில் இருந்த 2,687 சிறார்களுள் 664 சிறார்கள் மட்டுமே திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது மாநிலத்தில் இருந்த மொத்த ஆதரவற்ற சிறார் எண்ணிக்கையில் ஒரு விழுக்காடு மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மாநிலத்தில் வசித்த 32 ஆயிரத்து 555 இலங்கை அகதி குடும்பங்களுள் 4,815 குடும்பங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். அடையாளம் காணப்பட்ட 21 ஆயிரத்து 538 தொழிலாளர்களில் எவரும் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் அங்கீகாரம்

மேலும், "காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் தேசிய அங்கீகரிப்பு அமைப்பிடமிருந்து அனுமதி பெற வேண்டும். இதனை முறையாக வலியுறுத்ததால் மருத்துவ சேவையின் முழுமையான தரத்தை உறுதி செய்ய இயலவில்லை.

எனவே அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தேசிய தர உறுதி கட்டமைப்பின் கீழ் அங்கீகாரம் பெற வேண்டும் எனவும், தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் தேசிய அங்கீகரிப்பு அமைப்பிடமிருந்து அனுமதி பெற வேண்டும்" என தணிக்கை குழு பரிந்துரைத்துள்ளது.

மேலும் ஆதரவற்றோர், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், இலங்கை அகதிகள் ஆகியோரை திட்டம் குறித்த விளம்பரங்கள், சிறப்பு முகாம்கள் மூலம் திட்டத்தில் சேர்க்க வேண்டும் எனவும் பரிந்துரை வழங்கியுள்ளது.

இதையும் படிங்க: கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details