புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், நாளை (ஆக.26) மாநில நிதிநிலை அறிக்கை தாக்கல் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் இன்று சட்டப்பேரவை கேபினட் அறையில் தொடங்கி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லக்ஷ்மிநாராயணன், தேனி ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, சாய் சரவண குமார், தலைமைச் செயலாளர் அஸ்வினி குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நடைபெற்று முடிந்த முதல் அமைச்சரவைக் கூட்டம்
என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு பதவி ஏற்ற பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது நிதிநிலை அறிக்கை தாக்கலில் இடம்பெறவுள்ள மிக முக்கிய அறிவிப்புகள், சலுகைகள், மக்கள் நல திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு முன்னதாக புதுச்சேரி மாநில சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நடைபெறவிருக்கிறது.