தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று முடிவடைந்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம் தலைமை செயலகத்தில் தொடங்கி உள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது - கல்லூரி இறுதியாண்டு
மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்
11:57 June 24
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி உள்ளது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
இந்தக் கூட்டத்தில்,
- புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது,
- ஊரடங்கில் தளர்வுகளை அளிப்பது,
- 11 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகளை மேலும் அதிகரிப்பது,
- அனைத்து மாவட்டங்களுக்கிடையே அரசுப் பேருந்து சேவையைத் தொடங்குவது,
- 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளை நடத்துவது,
- அதேபோல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வு,
- நிதிநிலை அறிக்கைத் தயாரிப்பு தொடர்பான ஆலோசனை
உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ஆளுநரின் உரை ட்ரெய்லர் தான்.. அண்ணாவின் அரசியல் வாரிசு நான்: அதிரடி பேச்சில் அசரடித்த ஸ்டாலின்
Last Updated : Jun 24, 2021, 6:23 PM IST