சென்னை புதுப்பேட்டை அருகே புதுப்பேட்டை மக்கள் கூட்டமைப்பு சார்பாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன், நாகை சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
'ஒன்றும் தெரியாதவர்களை ஆட்சியில் அமர்த்தினால் இப்படிதான்' - ஜெ. அன்பழகன் - caa protest chennai
சென்னை: புதுப்பேட்டை மக்கள் கூட்டமைப்பு சார்பாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர் மேடையில் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன், ஹிட்லருக்கு ஈடாக மோடியைப் பேச முடியாது என தெரிவித்த அவர், மோடி ஒரு சாதாரண ஆள் என்றார். ஆட்சி செய்ய தெரியாதவரை ஆட்சியில் உட்கார வைத்தால் இப்படித்தான் இருக்கும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், வீழ்ந்து வருகின்ற பொருளாதாரத்தை திசை திருப்புவதற்காக குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வருகிறார்கள் என்றும், வேண்டுமென்றே இஸ்லாமியர்களை பாஜக அச்சுறுத்தி வருகிறது என்றும் கூறினார்.