இன்று சட்டப்பேரவையில் பேசிய சட்டம், நீதிமன்றங்கள் - சிறைச் சாலைகள் துறை அமைச்சர்சி.வி. சண்முகம், சுங்கத் துறை அலுவலர்களுக்கும் புவியியல் துறை அலுவலர்களுக்கும் 26 லட்சம் மதிப்பில் கையடக்கக் கணினி வழங்கப்படும் என்றும் சுரங்கங்களைக் கண்காணிக்க ஆளில்லா சிறிய விமானங்கள் பயன்படுத்தப்படும் என்றும் கூறினார்.
கனிம வளங்கள் தொடர்பான புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் சி.வி. சண்முகம்
சென்னை: தொழில் துறை சார்பாக சுரங்கங்கள், கனிம வளங்கள் தொடர்பான புதிய அறிவிப்புகளை அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று வெளியிட்டுள்ளார்.
சி.வி. சண்முகம்
மேலும் குவாரி தொழிலாளர்களும் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்கள் என்று குறிப்பிட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் புவியியல், சுங்கத்துறை சார்பாக புதிய அலுவலகங்கள் கட்டித் தரப்படும் என்றும் உறுதியளித்தார். ஆய்வுப் பணிகளைத் திறம்படக் கையாளக் கூடுதலாக ஒரு இயக்குநர் பதவி உருவாக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.