தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'அனுமதியின்றி பயன்படுத்தும் ஒலிபெருக்கிகள் பறிமுதல் செய்யப்படும்’

தேர்தல் நேரத்தில் அனுமதியின்றி பயன்படுத்தப்படும் அனைத்து ஒலிபெருக்கிகளும் பறிமுதல்செய்யப்படும் எனத் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

By

Published : Sep 28, 2021, 8:41 AM IST

சென்னை:காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற்றிடவும், தேர்தல் நடத்தை விதிகளின்படி தேர்தல் காலங்களில் ஒலிபெருக்கிகள் போன்றவற்றைப் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பயன்படுத்தவும், முறைப்படுத்தவும் பின்வரும் கட்டுப்பாடுகளை விதித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஆணைகளை வெளியிட்டுள்ளது.

அதில், “தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டதிலிருந்து தொடங்கி தேர்தல் நடைபெறும் நாள் வரை, தேர்தல் பரப்புரைகளுக்காக எந்தவொருவகை வாகனங்களிலும் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிபெருக்கிகளை காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றது.

ஒலிபெருக்கிகள் பறிமுதல்

யாதொரு பொதுக் கூட்டங்களுக்கோ அல்லது ஊர்வலங்களுக்கோ ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த வேண்டுமாயின் காவல் துறையின் எழுத்து மூலமான முன் அனுமதி பெற வேண்டும். மேலும் ஒலிபெருக்கிகளைப் பொது அமைதிக்கு இடையூறு ஏற்படாதவாறு பயன்படுத்த வேண்டும்.

மேற்சொன்னவாறு வரையறுக்கப்பட்ட நேரங்களுக்கு அப்பாலும் அல்லது சம்பந்தப்பட்ட அலுவலர்களின் எழுத்து மூலமான அனுமதியின்றியும் பயன்படுத்தப்படும் அனைத்து ஒலிபெருக்கிகளும் அதனைப் பயன்படுத்துவதற்குத் தொடர்புடைய அனைத்துக் கருவிகளுடன் பறிமுதல்செய்யப்படும்.

மேலும், தேர்தல் நடத்தை விதிகளை மீறினால் காவல் துறை மூலம் நடவடிக்கையும் எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரப் பலகைகள் வைத்தல் கூடாது

மேலும், தேர்தல் நடத்தை விதிகளின்படி பொது இடங்களில் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான பதாகைகள், கொடிகள், சின்னங்கள் வரைதல், கவரொட்டிகள் ஒட்டுவது தொடர்பாக பின்வரும் வரையறைகளைத் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

“எந்த ஒரு அரசு வளாகத்திலும் கட்டடங்கள் உள்பட சுவர் எழுத்துகள், சுவரொட்டிகளை ஒட்டுதல், வேறுவிதங்களில் உருக்குலைத்தல் அல்லது கட் அவுட்கள், விளம்பரப் பலகைகள், பதாகைகள், கொடிகள் முதலியவற்றை வைத்தல் ஆகியவை அனுமதிக்கப்படக் கூடாது.

இத்தகைய இடங்களில் உரிமையாளரின் அனுமதியிருந்தாலும், சுவரில் எழுதுவதோ, சுவரொட்டி போன்றவற்றை ஒட்டுவதோ கூடாது. ஓர் இடத்தின் உரிமையாளரின் சம்மதம் பெறப்பட்டுள்ளது என்ற காரணத்தின் அடிப்படையில் எந்தச் சூழ்நிலைகளிலும் சுவரில் எழுதுவதோ அல்லது சுவரொட்டி ஒட்டுவதோ கூடாது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதிமுக ஆட்சியில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை - கனிமொழி

ABOUT THE AUTHOR

...view details