சென்னை:சின்மயா நகர் நெற்குன்றம் பாதை ஆற்றுப் பாலம் அருகே தொழிலதிபரை கொலை செய்த கும்பல் பிளாஸ்டிக் கவரில் உடலை சுருட்டி சாலையில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் சினிமா தயாரிப்பாளர் என்பது விசரணையில் தெரியவந்துள்ளது.
ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் பாஸ்கரன் (67). இவர் ஆதம்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். பாஸ்கரன் தன்னுடைய மகன் கார்த்திக்குடன் சேர்ந்து ரியல் எஸ்டேட்டுடன் தொடர்புடைய தொழிலை செய்து வந்தார்.
முதல் சந்தேகம்: நேற்று ஆதம்பாக்கத்தில் இருந்து காரில் கிளம்பும் முன் மாலை நான்கு மணிக்கு அண்ணாசாலையில் உள்ள பிரபலமான ஹோட்டலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றிருக்கிறார் பாஸ்கரன்.
அதன் பின்பு வெகு நேகரமாக பாஸ்கரனிடமிருந்து எந்த விதமான அழைப்பும் வராத காரணத்தினால், அவருடைய மனைவி மாலை நேரத்தில் போன் செய்திருக்கிறார். அப்போதும் பாஸ்கரன் தெளிவாக பேசியதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதன் பின்பு அவரிடம் இருந்து எந்த அழைப்பும் வராத காரணத்தினால் சந்தேகம் அடைந்த அவரது மகன், தந்தை பயன்படுத்திய காரினுடைய ஜிபிஎஸ்ஐ வைத்து தேடிய போது, கார் விருகம்பாக்கத்தில் உள்ள நடேசன் தெரு அருகே இருப்பது தெரியவந்துள்ளது.
பிளாஸ்டிக் கவரில் உடல்:ஆனால் அங்கு சென்று பார்த்தபோது, காரில் தந்தை இல்லாததால் அதிர்ச்சியடைந்த மகன் கார்த்திக், நேராக நேற்று இரவு ஒரு மணி அளவில் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தந்தையை காணவில்லை என புகார் அளித்திருக்கிறார்.
இந்நிலையில் இன்று காலை 6 மணி அளவில், சின்மயா நகர் நெற்குன்றம் சாலையில், மாநகராட்சி துப்புரவு தொழிலாளர் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலை ஓரம் பிளாஸ்டிக் பையில் மூட்டை போன்ற ஒன்று கிடப்பதை பார்த்துள்ளனர்.