தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களிடம் ரூ.2 கோடி அபராதம்! - கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களிடம் ரூ.2 கோடி அபராதம்

அரசின் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளிடமிருந்து ரூ.2,40,86,009 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் வேலுமணி கூறினார்.

Businesses shops fined Rs 2 crore for non-compliance with corona security measures  TN Minister Velumani  corona security measures  கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களிடம் ரூ.2 கோடி அபராதம்  கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள்
Businesses shops fined Rs 2 crore for non-compliance with corona security measures TN Minister Velumani corona security measures கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களிடம் ரூ.2 கோடி அபராதம் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள்

By

Published : Oct 6, 2020, 4:03 AM IST

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் வெளியில் சென்ற தனிநபர்கள் மற்றும் அரசின் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது 01.04.2020 முதல் 03.10.2020 வரை ரூ .2,40,86,009 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
தமிழ்நாடு நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் மார்ச் 17 முதல் தற்போது வரை 1,72,773 நபர்கள் பாதிக்கப்பட்டு, அவர்களில் 1,57,216 ( 91 % ) நபர்கள் குணமடைந்துள்ளனர். தற்போது 12,283 நபர்கள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

04.10.2020 அன்று வரை 14,78,196 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெருநகர சென்னை மாநகராட்சிகளப்பணி மூலம் சேகரிக்கப்பட்ட மற்றும் சோதிக்கப்பட்ட மாதிரிகள் 7,43,071. இவை ஒரு மில்லியனுக்கான சோதனையில் 1,79,900 ஆகும். நாட்டிலேயே அதிகமான பரிசோதனை செய்த மாநகராட்சி பெருநகர சென்னை மாநகராட்சி , சென்னையில் தற்போது வரை 55,595 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு அவற்றில் 28.29 லட்சம் நபர்கள் பயனடைந்துள்ளனர்.

இந்தியாவிலேயே சென்னை மாநகராட்சியில்தான் அதிகமாக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை 1,10297 விற்பனையாளர்கள் சோதனை செய்யப்பட்டுள்ளனர்.

இதன் முலம் தினமும் சந்தைகளுக்கு வருகைதரும் பொதுமக்களுக்கு தொற்று பரவாமல் தடுக்கப்படுகிறது. சென்னையில் 04.10.2020 அன்று வரை 24,736 வீடுகளும். 198 லட்சம் பேரும் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
மெரினா கடற்கரையில் தற்போது வரை பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனினும் கடற்கரை பகுதி மாநகராட்சியின் சார்பில் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரமாகும் பயன்படுத்தப்பட்ட முகக்கசவங்கள் மாநகராட்சி தூய்மை பணியாளர்களால் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தப்பட்டு விஞ்ஞான முறையில் எரியூட்டப்படுகின்றன.
அரசு தெரிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளான முக்க் கவசம் அணிதல், தகுந்த இடைவெளி கடைப்பிடித்தல் மற்றும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் ( SOP ) ஆகியவற்றை பின்பற்றாத தனிநபர்களிடமிருந்து அபராதம் , நிறுவனங்களின்மீது அபராதத்துடன் கூடிய சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் வெளியில் சென்ற தனிநபர்கள் மற்றும் அரசின் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது 01.04.2020 முதல் 03.10.2020 வரை ரூ .2,40,86,009 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் திரு.ஹர்மந்தர் சிங், சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் த.ந.ஹரிஹரன் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தமிழ் ஒளி ஏகாம்பரம் மறைவு; சீமான் இரங்கல்

ABOUT THE AUTHOR

...view details