தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் பேருந்துகள் இயக்கம் - stalin

தமிழ்நாடு முழுவதும் நாளை (ஜூலை 5) முதல் 50 விழுக்காடுப் பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழ்நாடு முழுவதும் பேருந்துகள் இயக்கம்
தமிழ்நாடு முழுவதும் பேருந்துகள் இயக்கம்

By

Published : Jul 4, 2021, 5:37 PM IST

Updated : Jul 4, 2021, 10:25 PM IST

கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலாகி வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூலை 2) தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து மாவட்டங்களுக்குமான பொதுத் தளர்வுகளை அறிவித்தார்.

நாளை முதல் பேருந்துகள்

அதன்படி நாளை முதல் தமிழ்நாட்டில், மாவட்டங்களுக்குள்ளும் மாவட்டங்களுக்கு இடையேயும் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பைத்தொடர்ந்து அரசுப் பேருந்துகள், பேருந்து நிலையங்கள், கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

கோயம்புத்தூரில் பேருந்துகள், மால்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டன.

அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூரில் உள்ள பேருந்து நிலையங்கள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மை செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.

தயார் நிலையில் பேருந்துகள்

பேருந்து நிலையங்களில் உள்ள இருக்கைகள், கழிவறைகள், நடைபாதைக் கடைகள் அனைத்தும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு தூய்மைப் பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு சோதனையோட்டம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: 11ஆவது திருமணநாளைக் கொண்டாடும் தோனி - சாக்‌ஷி தம்பதி

Last Updated : Jul 4, 2021, 10:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details