தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நடத்துநரை பஞ்சராக்கிய புரோட்டா மாஸ்டர்! - பேருந்து நடத்துனர்

சென்னை: பேருந்தின் படியில் பயணம் செய்யக் கூடாது என எச்சரித்த நடத்துநரை தாக்கிய புரோட்டா மாஸ்டர் கைது செய்யப்பட்டார்.

chennai

By

Published : Apr 29, 2019, 3:03 PM IST

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வகுமார் (25) . இவர் புரோட்டா மாஸ்டராக பணிபுரிகிறார். செல்வகுமார் நேற்று மாலை 15 எஃப் மாநகரப் பேருந்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏறி சிறிது தூரம் படிக்கட்டில் பயணம் செய்தார். அப்போது, பேருந்து நடத்துநரான திருவள்ளூர் பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த தனசிங் (42) படிக்கட்டில் பயணம் செய்த செல்வகுமாரை பேருந்தின் உள்ளே வரச் சொன்னார்.

அதற்கு புரோட்டா மாஸ்டர் செல்வகுமார், 'என்னால் வர முடியாது' என தனசிங்கிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது, திடீரென நடத்துநர் தனசிங்கை செல்வகுமார் தாக்கி மாநகரப் பேருந்தில் இருந்து கீழே தள்ளினார்.

chennai

இதில் தனசிங்குக்கு கால் முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக கோயம்பேடு காவல் நிலையத்திற்கு பொது மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் ராஜ்குமார் செல்வகுமாரை கைது செய்தனர். மேலும் அவர் மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details