சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் வாசலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை, பர்தா, தலைகவசம் அணிந்த ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
இதை சந்தேகித்த இரவு ரோந்து பணியில் இருந்த காவலர்கள், தனியாக இருந்த பெண் யார்? எதற்காக நள்ளிரவில் ஏடிஎம் வந்தார் என சந்தேகத்தின் அடிப்படையில் விசாரிப்பதற்கு அருகில் சென்றுள்ளனர்.
காவலர்களை பார்த்ததும், அவர் தம் கையில் வைத்திருந்த ஏடிஎம் மெஷினை அறுக்க கொண்டுவந்த வெல்டிங், கட்டிங் மெஷின்களை அங்கேயே வைத்து விட்டு தப்பி ஓடியுள்ளார். சுதாரித்துக் கொண்ட காவலர்கள், அவரை துரத்தி பிடித்த பின் விசாரித்ததில் அவர் பெண் அல்ல ஆண் என்று தெரியவந்தது.
எஸ்பிஐ வங்கி கொள்ளை முயற்சி இதையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்து சென்று மேலும் விசாரணை மேற்கொண்டதில், அவர் பெயர் ராஜ்குமார்(24) என்றும், தனியாக வெல்டிங் கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. தனது வெல்டிங் கடையை புதுப்பிக்கவே காவலாளி இல்லாதா ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். முதல் முறையாக கொள்ளை முயற்சியில் ஈடுபடுவதால், யாரும் கண்டுபிடிக்காமல் இருக்க பர்தா அணிந்து வந்துள்ளார்.