சென்னை திருமுல்லைவாயில் அடுத்த அன்னனூர், சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வரதன் (60). இவரது மனைவி பத்மினி (58). இருவரும் கடந்த 4ஆம் தேதி மேடவாக்கத்தில் உள்ள அவர்களின் மகள் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் அவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக அக்கம்பக்கத்தினர் இன்று காலை பத்மினிக்கு தெரிவித்ததால், வரதனும் பத்மினியும் பதறியடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்த பார்த்துள்ளனர்.
அப்போது வீட்டில் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருள்கள் சிதறிக் கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 32 சவரன் தங்கநகை, 52 ஆயிரம் ரொக்கப் பணம், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளிப் பொருள்கள் திருடுபோயிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து பத்மினி, திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் சம்பவம் நடந்த வீட்டில் தீவிர சோதனையை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து வழக்குப்பதிந்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் காவல் துறையினர் வலைவீசித் தேடிவருகின்றனர்.
சோதனை மேற்கொண்ட காவல் துறையினர் இதையும் படியுங்க: சினிமா பாணியில் பைக் திருட்டு - வேதனையில் முடிந்த சோதனை ஓட்டம்!