சென்னை மாநகராட்சி வரவு செலவு திட்ட மதிப்பு வெளியீடு! - Budget of chennai corporation
2020-2021-ஆம் நிதியாண்டு வரவு செலவுத் திட்டத்தில் ரூ.3815.07 கோடியாக நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இனங்களின் செலவு, திருத்திய மதிப்பீட்டில் ரூ.3582.61 கோடியாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: 2021-2022-ஆம் நிதியாண்டின் வரவு ரூ. 2935.26 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.3481.83 கோடியாகவும் இருக்கும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி 2021-2022-ஆம் நிதியாண்டின் வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டை தயாரித்துள்ளது. 2021-2022-ஆம் நிதியாண்டின் வரவு ரூ.2935.26 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.3481.83 கோடியாகவும் இருக்கும் எனவும், மூலதன வரவு ரூ.2084.00 கோடியாகவும், மூலதனச் செலவு ரூ. 2438.21 கோடியாகவும் இருக்கும் எனவும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2020-2021-நிதியாண்டிற்கான வரவு செலவு திட்டப்படி ரூ.3081.21 கோடியாக இருந்த வருவாய் கணக்கின் வரவுகள், இதே ஆண்டின் திருத்திய மதிப்பீட்டின்படி ரூ.3201.07 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. 2021-2022-ஆம் நிதியாண்டில் இது ரூ.2935.26 கோடியாக இருக்கும்.
2020-2021-ஆம் நிதியாண்டு வரவு செலவுத் திட்டத்தில் ரூ.3815.07 கோடியாக நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இனங்களின் செலவு, திருத்திய மதிப்பீட்டில் ரூ.3582.61 கோடியாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 2021-2022-2 நிதியாண்டில் வருவாய் இனங்களின் செலவு ரூ.3481.83 கோடியென மதிப்பிடப்பட்டுள்ளது.
வருவாய்:
முத்திரைத்தாள் மீதான கூடுதல் வரி - ரூபாய் 150 கோடி
மாநில நிதிக்குழு மானியம் - ரூபாய் 550 கோடி
இதர வருவாய்கள் - ரூபாய் 1135.26 கோடி
செலவினங்கள்:
பணியாளர் சம்பளம் மற்றும் ஓய்வு ஊதியம் - ரூபாய் 1758.24 கோடி
நிர்வாக செலவு - ரூபாய் 124.58 கோடி
பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு பணி செலவினங்கள் - ரூபாய் 1055.94 கோடி
கடனுக்கான வட்டி செலுத்துதல் - 168.50 கோடி
2021 -2022 நிதியாண்டில் துறைவாரியாக ஒதுக்கப்படும் நிதி:
சாலை - ரூபாய் 470.67 கோடி
மழைநீர் வடிகால்வாய்கள் - ரூபாய் 77 கோடி
பாலங்கள் - ரூபாய் 260 கோடி
மின்சாரம் - ரூபாய் 150 கோடி
திடக்கழுவு மேலாண்மை - ரூபாய் 134.10 கோடி
இயந்திரப் பொறியியல் - ரூபாய் 52.96 கோடி
கட்டடம் - ரூபாய் 130 கோடி
கல்வி - ரூபாய் 4.20 கோடி
சுகாதாரம் - ரூபாய் 1.70 கோடி
குடும்ப நலம் - ரூபாய் 1.40 கோடி
சிறப்பு திட்டங்கள் - ரூபாய் 66 கோடி
பூங்கா மற்றும் விளையாட்டு திடல் - ரூபாய் 73 கோடி
மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு திட்டம் - ரூபாய் 60 கோடி
மேயர் சிறப்பு மேம்பாட்டு திட்டம் - ரூபாய் 2 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.