தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 15, 2020, 8:45 AM IST

ETV Bharat / city

பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு: தமிழ்நாட்டின் அட்சய பாத்திரம் அம்மா உணவகம்

ஹைதராபாத்: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்த அட்சயபாத்திரமான அம்மா உணவகத்துக்கு இந்தாண்டு மாநில வரவு-செலவு திட்ட அறிக்கையில் (பட்ஜெட் 2020-21) ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் அறிவித்தார்.

Budget allocation for AMMA Canteens தமிழ்நாட்டின் அட்சய பாத்திரம் அம்மா உணவகம் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை, தமிழ்நாடு வரவு செலவு திட்டம், தமிழ்நாடு பட்ஜெட், பட்ஜெட் 2020, தமிழ்நாடு பட்ஜெட் 2020, அம்மா உணவகம், இந்திரா கேண்டீன், இந்திரா உணவகம், கர்நாடகா, ஒ.பன்னீர் செல்வம் TN Budget 2020, TN Budget, TN Budget in OPS
Budget allocation for AMMA Canteens

திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை அகற்றிவிட்டு தனிப்பெரும்பான்மையுடன் ஜெயலலிதா அரியணைக்கு வந்த சமயத்தில் அவர் மனதில் தோன்றிய திட்டம் அம்மா உணவகம்.

மலிவு விலையில் சாப்பாடு

ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்க வேண்டும் என்ற இத்திட்டம் ஜெயலலிதாவால் 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

அம்மா உணவகத்தில் தயாரான உணவை ருசிக்கும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா

இத்திட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த உணவகங்களில் ரூ.1க்கு இட்லி, ரூ.3க்கு சாம்பார் சாதம் மற்றும் ரூ.5க்கு கலவை சாதம் வழங்கப்பட்டுவருகிறது.

அம்மா உணவகம்

தமிழகத்தை பொருத்தமட்டில் மொத்தம் 654 அம்மா உணவகங்கள் செயல்பட்டுவருகின்றன. அதில் 407 உணவகங்கள் சென்னையில் உள்ளன. பெரும்பாலும் இந்த உணவகங்களில் ஒரு ஷிப்ட்க்கு 8 பேர் வேலை பார்க்கின்றனர்.

ஒருநாளைக்கு சுமார் நான்கு லட்சம் பேர் பயனடைகின்றனர். திட்ட வருடாந்திர செலவு ரூ.100 கோடியாகும்.

இத்திட்டத்தின் மூலம் ரூ.50 கோடிக்கும் குறைவான வருமானம் கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு 2017ஆம் ஆண்டு மாநில வரவு-செலவு திட்ட நிதிநிலை அறிக்கையில் ரூ.30.46 கோடிகள் ஒதுக்கப்பட்டிருந்தது.

எதிர்கொள்ளும் பிரச்னை

தொடர்ந்து 2018ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் அது ரூ.27.05 கோடியாக குறைந்தது. 2019-20ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.29.40 கோடியாக இருந்தது. இந்நிலையில் தற்போது அரசின் ஒதுக்கீடு மும்மடங்கு அதிகரித்துரூ.100 கோடியாக உள்ளது.

இதற்கான அறிவிப்பை நிதியமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் நேற்று (பிப்14) சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அம்மா உணவகத்தில் பெரும்பாலும் பெண்கள் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு கடந்த இரு மாதங்களாக ஊதியம் கொடுக்கப்பட்டுவருகிறது.

இதற்கிடையில் அங்கு பணிபுரியும் பணியாட்களும் 20-50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுவருகின்றனர். சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களுக்கு தற்போது வரை ரூ.669 கோடி செலவிடப்பட்டுள்ளது.

மதுரை நிலவரம்

இதன் மூலம் அரசுக்கு ரூ.185 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த வருவாய் இழப்பை சரிகட்டும் வகையில் உணவுப் பொருட்களின் தரமும் குறைக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் 12 அம்மா உணவகங்கள் உள்ளன.

ஏழைகளின் பசி போக்கும் அட்சய பாத்திரம் அம்மா உணவகம்

இதில் ஆறு உணவகங்களில் தினந்தோறும் ரூ.3600 வரை வருவாய் கிடைக்கிறது. மீதமுள்ள உணவகங்களில் சராசரி வருவாய் ரூ.1000ஆக உள்ளது. இங்கு 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் முறையே ரூ.1.3 கோடி, ரூ.1.25 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்திலிலுள்ள 10 உணவகங்களில் 3.6 லட்சம் இட்லிகள், 87 ஆயிரம் தட்டுகள் தயிர்சாதம், 90 ஆயிரம் தட்டுகள் சாம்பார் சாதம் ஒவ்வொரு மாதமும் விற்பனை ஆகின்றது.

இதற்காக மாநகராட்சி சார்பில் மாதம் ரூ.24.06 லட்சம் செலவாகிறது. வருமானம் ரூ.10 லட்சமாக இருக்கிறது.

திருச்சி-கோயமுத்தூர்

இதேபோல் கோயமுத்தூர் மாநகராட்சி நடத்தும் அம்மா உணவகத்தில் ரூ.11.65 லட்சம் வருமான இழப்பு உள்ளது.

ஒருநாளைக்கு ரூ.1.1 லட்சம் வரை திருச்சி மாநகராட்சி அம்மா உணவத்துக்கு செலவிட்டுவருகிறது. இங்கு ஒருநாளைக்கு ரூ.30 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது.

பின்தொடரும் மாநிலம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்த அம்மா உணவக திட்டம், அண்டை மாநிலங்கள் மட்டுமின்றி வடமாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலில் எதிர்க்கட்சிகள் அம்மா உணவகத்தை அரசியல் ரீதியாக எதிர்த்தாலும், அது ஏழை மக்களிடம் செல்வாக்கு பெற்றதால் வேறு வழியின்றி ஆதரிக்க தொடங்கினர்.

பெங்களுருவில் காங்கிரஸ் அரசாங்கம் கொண்டுவந்த இந்திரா கேண்டீன் (உணவகம்)

இதைப் பார்த்து அண்டை மாநிலமான கர்நாடகத்தில் அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் இந்திரா உணவகத்தை கொண்டுவந்தது. தொடர்ந்து ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் இத்திட்டத்தை பின்பற்றி வெவ்வேறு பெயர்களில் மலிவு விலை உணவகம் கொண்டுவரப்பட்டது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க:பள்ளிக் கல்வித் துறைக்கு 34 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details