தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கூவம், பக்கிங்ஹாம் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் பணிக்கு ரூ. 1281.88 கோடி நிதி ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு ஆணை

சென்னை: கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் பிரதான நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் பணிகளுக்கு ரூ. 1281.88 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

By

Published : Dec 24, 2020, 1:57 AM IST

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் இவற்றை சேர்ந்த பிரதான நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதை இடைமறித்தல், மாற்று வழிகளை அமைத்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், தற்போதுள்ள சென்னை கழிவுநீர் கட்டமைப்புகளை புதுப்பித்தல் போன்ற பணிகளுக்கு சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்று வாரியத்தால் விரிவான திட்ட அறிக்கை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் பிரதான நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் பணிகளுக்கு ரூ. 1281.88 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details