சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், பிஎஸ்என்எல் பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் மதிவண்ணன், நிர்வாகிகளுடன் கலந்துகொண்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 'பிஎஸ்என்எல் பாதுகாப்பு மன்றம்' (SAVE BSNL FORUM) என்ற அமைப்பின் கீழ், நாங்கள் 10 சங்கங்கள் இணைந்து தமிழ்நாடு தழுவிய அளவில் பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பாதுகாப்பதற்கான தொடர் போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம்.
அதன் ஒரு கட்டமாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில், அக்டோபர் 24ஆம் தேதி தர்ணா போராட்டம் நடத்த இருக்கிறோம். அதன் மறுநாள் 25ஆம் தேதி, ஆளுநரை சந்தித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு எங்களுடைய கோரிக்கையை மனுவாக சமர்ப்பிக்கிறோம். பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு 100% அரசுத்துறை நிறுவனம். அந்த நிறுவனம் இன்று கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.
ஆப்கானிஸ்தானுக்கு 75 ஆயிரம் டன் கோதுமையை பரிசளிக்கிறது இந்தியா!
85 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, எட்டு மாதமாகச் சம்பளம் வழங்காமல் இருக்கிற சூழல் நிலவுகிறது. மின்சார இணைப்புகளுக்கான கட்டணத்தைக் கூட கட்ட முடியாமல், பல இடங்களில் இணைப்பு துண்டிக்கப்படும் அவலநிலை தொடர்கிறது. நிரந்தர ஊழியர்களுக்கு மாத சம்பளம் உரிய தேதியில் வழங்கப்படுவதில்லை. செப்டம்பர் மாத சம்பளம் தற்போது வரை வழங்கவில்லை.