தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'மூடப்படும் எனும் தகவல் முற்றிலும் பொய்'  -  வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பி.எஸ்.என்.எல்! - The BSNL administration is not going to shut down

சென்னை: பி.எஸ்.என்.எல் நிர்வாகம் மூடப்படுவதாகப் சமூகவலைத் தளங்களில் பரவும் தகவல்கள் உண்மையில்லை என பி.எஸ்.என்.எல் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bsnl Shutting Down Fake News

By

Published : Oct 11, 2019, 6:18 PM IST

பி.எஸ்.என்.எல் நிர்வாகம் மூடப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல்கள் தொடர்பாக பி.எஸ்.என்.எல் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, சமீபத்தில் பி.எஸ்.என்.எல் நிர்வாகம் மூடப்படுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில், இந்த தகவல்கள் உண்மையல்ல என வாடிக்கையாளர்கள், பொதுமக்களுக்குத் பி.எஸ்.என்.எல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை புதுப்பித்து புத்துயிராக்கும் முயற்சியாக விருப்ப ஓய்வு, 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, பி.எஸ்.என்.எல் சொத்து விற்பனை ஆகியவற்றை உள்ளடக்கியத் திட்டம் இந்திய அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது.

பி.எஸ்.என்.எல் எப்போதும் தேசத்தின் சேவையில் ஈடுபட்டு வருகிறது. அதில் குறிப்பாக இயற்கைப் பேரிடர் காலங்களிலும், தொலைதூர சேவைகள் வழங்குவதிலும் பி.எஸ்.என்.எல் தனது மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கி வருகிறது. இனிமேலும் அவ்வாறே செயல்படும் என பி.எஸ்.என்.எல் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மணமாகி 1 மாதத்தில் இளம்பெண் 5 மாத கர்ப்பம்: பாஜக பிரமுகர் கைதும்... பின்னணியும்...!

ABOUT THE AUTHOR

...view details